சென்னை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி திமுக ஒன்றிய செயலாளர் படுகொலை முழு விவரம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மேம்பாலத்தின்அருகே திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது ஒரு கை துண்டு துண்டாக வெட்டப்பட்டது. இடது தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நி
லையில், உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வந்தவர் ஆராவமுதன். இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்\
நேற்று இரவு வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறக்கப்பட இருந்த நிலையில், அதனைப் பார்வையிடுவதற்காக ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்த போது காரின் குறுக்கே வந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து காரின் மீது தூக்கி வீசி தாக்குதல் நடத்தினார்கள். திடீரென தனது காரை வழிமறித்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆராவமுதன், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, கொலையாளிகள் அவரை சூழ்ந்துகொண்டு தப்பிக்கவிடாமல் அடுத்தடுத்து கத்தியால் உடல் முழுவதும் கொடூரமாக வெட்டிவிட்டு, கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
உடனடியாக ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆராவமுதனை மீட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆராவமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.வெடிகுண்டு வீசி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளைப் பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அரசியல் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
