தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது -ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று முதல் பிறை தென்பட்டதால் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நாளை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
இந்த மாதங்களில் இஸ்லாமியர்கள் நோன்பை கடை பிடிப்பார்கள். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்
இந்நிலையில் இன்று மாலை ரமலான் பிறை தென்பட்டதாக தலைமை காஜி அறிவித்திருந்தார். அதன்படி ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
இது குறித்து தமிழக ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ள அறிவிப்பில்:
கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்று 11.03.2024 திங்கள்கிழமை புனிதமிகு ரமளான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.என ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது
Tags: மார்க்க செய்தி ஸஹர் உணவு


