Breaking News

யார் யாருக்கு எந்த தொகுதி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ BJP Lok Sabha candidates list 2024

அட்மின் மீடியா
0

 சற்று நேரத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தல்: 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே!


நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது அதன்படி மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

மேற்க்கு வங்கத்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

மத்திய பிரதேசத்தில் 24தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

குஜராத்தில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

ராஜஸ்தானில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

கேரளாவில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

தெலுங்கானாவில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

அஸ்சாமில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

ஜார்கண்ட் மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

சட்டிஸ்கரில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

டெல்லியில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. 

உத்தரகாண்டில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

அருணாசலபிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான், டையூ டாமன் ஆகிய இடங்களில் தலா1 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

கேரளா ஆட்டிங்கால் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளீதரன் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

போர்பந்தரில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

கேரளா திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

















Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback