Breaking News

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த வீடியோ baltimore bridge collapse video

அட்மின் மீடியா
0

 அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு எனத் தகவல்!




அமேரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஒரு பெரிய சரக்கு கப்பல் மோதியதில் இடிந்து விழுந்துள்ளது

மேலும் இந்த விபத்தில் யாராவது காயமடைந்தார்களா அல்லது பலியானார்களா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை 

அமெரிக்காவின் படாப்ஸ்கோ ஆற்றின் மீது மொத்தம் 1.6-மைல் தூரமும் , 4-லேன் கொண்ட பாலம் இதுவாகும் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பாலம் பால்டிமோர் துறைமுகத்தின் வெளிப்புறத்தை கடக்க பெல்ட்வேயின் அத்தியாவசிய இணைப்பாகவும் செயல்படுகிறது. மேலும் இந்த விபத்தினால் அனைத்து போக்குவரமும் மாற்றுப்பாதையில் உள்ளது என்று மேரிலாந்து போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது, 

இந்நிலையில் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் இனையத்தில் வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/zahir32134/status/1772530648881774787

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/PeterVeg1/status/1772522220209734068

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/PENELOPENICIA/status/1772530979980063202

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback