Article 370-ஐ விமர்சிப்பதும், பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதும் குற்றமல்ல - உச்ச நீதிமன்றம் Wishing Pak happy independence day, protesting against abrogation of Article 370 not a crime
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து Article 370 ரத்து செய்யப்பட்டதை விமர்சிப்பதோ, பாகிஸ்தானியர்களின் சுதந்திர தினத்தை வாழ்த்துவதோ கிரிமினல் குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து Article 370 ஐ நீக்கியது. இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தில வேலைப்பார்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜாவித் அகமது தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினம், ஆகஸ்டு 14 பாகிஸ்தான் சுதந்திர தின வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.இதனால் அவர் மீது மகாராஷ்டிர மாநில அரசு இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது.
தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,
தீர்ப்பு:-
விமர்சனங்களை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என்று கூறி பேராசிரியர் மீதான வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விமர்சிப்பதும், பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதும் குற்றமல்ல.
மாநிலம் அரசு எடுக்கும் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. மற்ற நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உண்டு.
இது அவரது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும், இது பிரிவு 19(1)(a) மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
குடிமக்களுக்கு அரசின் நடவடிக்கைகளில் கருத்து வேறுபாடுகளை தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை 'கறுப்பு நாள்' என்று விவரிப்பது, வெறுப்பைத் தூண்டும் முயற்சியாக இல்லாமல், 'எதிர்ப்பு மற்றும் வேதனையின்' வெளிப்பாடாக நீதிமன்றத்தால் பார்க்கப்படுகிறது5
மேலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்தந்த நாடுகளின் குடிமக்களுக்கு அந்தந்த சுதந்திர நாட்களில் வாழ்த்துகளை தெரிவிக்க உரிமை உண்டு. இந்திய குடிமகன் ஒருவர் பாகிஸ்தான் குடிமக்களுக்கு அவர்களின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 அன்று வாழ்த்துகளை தெரிவித்தால், அதில் தவறில்லை. இது நல்லெண்ணத்தின் சைகை. அவ்வாறான நிலையில், இது போன்ற செயல்கள் பல்வேறு மதக் குழுக்களிடையே நல்லிணக்கத்தை அல்லது பகை, வெறுப்பு அல்லது தவறான எண்ணத்தை உருவாக்கும் என்று கூற முடியாது.
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே அவருக்கு உள்நோக்கங்களைக் கூற முடியாது. என்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டு ஜாவித் அகமதுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.sci.gov.in/wp-admin/admin-ajax.php?action=get_judgements_pdf&diary_no=203592023&type=j&order_date=2024-03-07
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு
