அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு amma makkal munnetra kazhagam 2024
பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு amma makkal munnetra kazhagam 2024
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
திமுக கூட்டணி:-
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணி:-
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, புரட்சி பாரதம் கட்சி எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது
பாஜக கூட்டணி:-
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
✦ திருவள்ளூர்
✦ வட சென்னை
✦ தென் சென்னை
✦ மத்திய சென்னை
✦ கிருஷ்ணகிரி
✦ திருவண்ணாமலை
✦ நாமக்கல்
✦ திருப்பூர்
✦ நீலகிரி
✦ கோயம்புத்தூர்
✦ பொள்ளாச்சி
✦ கரூர்
✦ சிதம்பரம்
✦ நாகப்பட்டினம்
✦ தஞ்சாவூர்
✦ மதுரை
✦ விருதுநகர்
✦ திருநெல்வேலி
✦ கன்னியாகுமரி
பாமக போட்டியிடும் தொகுதிகள்:-
✦ காஞ்சிபுரம்
✦ அரக்கோணம்
✦ தர்மபுரி
✦ ஆரணி
✦ விழுப்புரம்
✦ கள்ளக்குறிச்சி
✦ சேலம்
✦ திண்டுக்கல்
✦ மயிலாடுதுறை
✦ கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
✦ ஈரோடு,
✦ ஸ்ரீபெரும்புதூர்,
✦ தூத்துக்குடி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:-
✦ திருச்சி,
✦ தேனி ஆகிய தொகுதிகள் அமமுகவிற்கு ஒதுக்கீடு
புதிய நீதி கட்சி (தாமரை சின்னம்)
✦ வேலூர்
இந்திய ஜனநாயக கட்சி (தாமரை சின்னம்)
✦ பெரம்பலூர்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ சிவகங்கை
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ தென்காசி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
✦ இராமநாதபுரம்
Tags: அரசியல் செய்திகள்