அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! சிறப்பம்சங்கள் முழு விவரம் aiadmk manifesto 2024
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! சிறப்பம்சங்கள் முழு விவரம் aiadmk manifesto 2024
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் புதுச்சேரி யில் ஏப்ரல் 19ஆம் தேதிவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்
நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை
குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களை உட்படுத்த வலியுறுத்தல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்
குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்
உச்சநீதிமன்றக் கிளை சென்னை அமைக்க வலியுறுத்தல்
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்
ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
அதிமுக கூட்டணி:-
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது
எஸ்டிபிஐ கட்சி
எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய தமிழகம்
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேமுதிக கட்சிக்கு :-
திருவள்ளூர்
மத்திய சென்னை
தஞ்சாவூர்
விருதுநகர்
கடலூர் ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது போக மீதம் உள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது
இந்நிலையில் நேற்று அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டடது அதனை தொடர்ந்து இன்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது
கோவை நாடாளுமன்ற தொகுதி- சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி- கருப்பையா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி - சந்திரமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி - பாபு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி - பிரேம் குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி - அசோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி - அருணாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி - லோகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி - பசுபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி- கலியபெருமாள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி- குமரகுரு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி - சேகர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
நெல்லை நாடாளுமன்ற தொகுதி - சிம்லா முத்துச்சோழன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி- தமிழ்வேந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி - சிவசாமி வேலுமணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - பசிலியா நசரேத் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
வட சென்னை நாடாளுமன்ற தொகுதி - ராயபுரம் ஆர்.மனோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி - ராஜசேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி - ஏ.என்.விஜயன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஆரணி நாடாளுமன்ற தொகுதி - கஜேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி - ஜெயபிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி - பாக்யராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
