Breaking News

புதுச்சேரியில் மாயமான 9 வயது பெண் குழந்தை கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் கண்டெடுப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதுவையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கழிவு நீர் கால்வாயில் வீசிய கொடூரம்

காணாமல் போன சிறுமியின் உடல் வீட்டின் அருகேயே உள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி மாநிலம், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார்.


கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்.இதையடுத்து, அவரது பெற்றோர், உறவினா்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், காணாமல் போன சிறுமியை அப்பகுதியில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் தேடி வந்தனர்மேலும், சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் இரு தினங்களுக்கு முன்பு சோலைநகர் பொதுமக்கள்  முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு, சிறுமியை கண்டுபிடுத்து தரவேண்டுமென உறவினர்கள் கோரிய நிலையில், வீட்டின் அருகில் உள்ள சாக்கடையில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback