85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் தபால் வாக்கு அளிப்பது எப்படி முழு விவரம்
85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் தபால் வாக்கு அளிப்பது எப்படி முழு விவரம்
தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவா்கள் தொடா்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் உள்ளது. அந்த பட்டியலில் உள்ளவா்களின் வீடுகளுக்கு புதன்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதிவரை, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செல்வா். அங்கு அவா்களைச் சந்தித்து தபால் வாக்குக்காக வரையறுக்கப்பட்டுள்ள 12டி படிவத்தை அளிப்பா்.விரும்பியவா்கள் மட்டும் படிவத்தை பூா்த்தி செய்து தரலாம்.
விருப்பப் படிவம் தந்தவா்களிடம் வாக்குகள் பதிவு செய்யப்படும். அதாவது வாக்குப் பதிவுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அலுவலா், வருவாய், காவல் துறையைச் சோ்ந்தவா்கள் என குழுவாக சென்று, தபால் வாக்கு படிவத்தை தந்து, வாக்கு பதிவு செய்த பின், அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள். அதன்பின், இவ்வாறாக பெறப்படும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கப்படும்.
தபால் வாக்குப்பதிவு, என்பது இது வாக்களிக்கும் ஒரு முறையாகும்,
இதில் வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் நேரில் வாக்களிக்காமல் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும்.
நேரில் வாக்களிக்க முடியாத நபர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Tags: அரசியல் செய்திகள்
