தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு!
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85ஆக உயர்வு!
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதானவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் சட்ட அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது இந்த வயது வரம்பை மத்திய சட்ட அமைச்சகம் உயர்த்தியுள்ளது. அதன்படி தபால் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தி மத்திய சட்ட அமைச்சம் அறிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் எடுத்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் 85 வயதுக்கு உட்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
