மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
08.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை ពេលयाली फुली म1881 ش )Under Negotiable Instruments Act 1881) - ότ L4 அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.பி.என்.ஸ்ரீதர். இ.ஆ.ப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
Tags: தமிழக செய்திகள்
