8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Hospital Attendants வேலை வாய்ப்பு தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே முழு விவரம்
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிட தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் கீழ்கண்டவாறு மாவட்ட தலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி:-
Hospital Attendants
Multi purpose Hospital Worker
Hospital Worker
கல்வித் தகுதி:-
Hospital Attendants, Multi purpose Hospital Worker, Hospital Worker ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுஇருந்தால் போதுமானது
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 மற்றும் அதிக பட்சம் 59 ஆண்டு
குறிப்பு :-
பணியிடங்கள் அனைத்தும் தொகுப்பூதிய அடிப்படையிலானவை.
தேர்வானோர் தேவை ஏற்படின் 11 மாதங்களுக்கு ஒரு முறை பணி நீக்கம் செய்து மீண்டும் பணியமர்த்தப்படுவர்.
இப்பணி நியமனங்கள் ஒரு போதும் நிரந்தரமாக்கப்படமாட்டாது.
இப்பணியிடங்களில் பணியமர்த்தப்படுவோர் எந்த நேரத்திலும் எந்த வித முகாந்தாமுமின்றி பணி நீக்கம் செய்யப்படலாம்.
இப்பணி நியமனத்தை மேற்கோள்காட்டி பின்னாளில் ஏதேனும் பதவிக்கான நேர்காணலில் முன்னுரிமை கோரலாகாது.
இப்பணியிடங்களுக்கான ஊதியம் தேசிய நலவாழ்வு குழுமத்திலிருந்து நிதி ஒதுக்கீடு பெற்றதும் தேர்வானவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நேர்காணல்:-
காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக வருகின்ற 08.03.2024 அன்று காலை 10.00 மணிக்கு நேரடி நேர்காணல் (Walkin Interview)மூலம் தகுதியான நபர்களை தேவைபடின் தகுதிதேர்வுடன் கூடிய நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நேர்காணலுக்கு வரும் பொழுது அனைத்து கல்வித்தகுதி தொடர்பான அசல் சான்றுகள் மற்றும்ஆவணங்கள் அசலுடன் நகல் பிரதி ஒன்றும் தம்முடன் கொண்டு வர வேண்டும்.
நேரடி நேர்காணல் நடைபெறும் இடம்:-
முதல்வர் அலுவலகம்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
மணல்மேடு, ஓரத்தூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் - 611 108
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு
