Breaking News

ரஷ்யாவில் அதிர்ச்சி இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்... 70 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்! வீடியோ இணைப்பு moscow attack

அட்மின் மீடியா
0

மாஸ்கோவில் அதிர்ச்சி இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்... 70 பேர் பலியான சோகம்... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்! வீடியோ இணைப்பு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைப்பெற்று கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், திடீரென அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டதில் சுமார் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பிரபலமான குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்றிரவு இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பிக்னிக் ராக் இசைக் குழுவினர் நடத்திக் கொண்டிருந்த இந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென துப்பாக்கிகளுடன் அரங்கிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ரசிகர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் சிதறியோடியது. இதில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதன் பின்னர், மர்ம கும்பல், அரங்கத்திற்கு தீயிட்டு கொளுத்தி, வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து 70 பேர் உடல்களை மீட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதனால் உயிரிழப்பு அதிகம் ஆகலாம் என அஞ்சப்படுகின்றது மேலும் ரஷ்யாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/BattaKashmiri/status/1771360685458608604

https://twitter.com/MoscowTimes/status/1771270300514017408

https://twitter.com/Angryman_J/status/1771275482375336016

https://twitter.com/MoscowTimes/status/1771260501286085028

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback