இந்த 7 ஏழு வகை பணிகளில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி முழு விவரம்
7 ஏழு வகை பணிகளில் உள்ளோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதாவது: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் ஓட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதற்காக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
யார் யாருக்கு தபால் ஓட்டு
1. Mercantile Marine
2. BSNL
3. Chennai Metro Rail Limited
4. Bureau of Civil Aviation Security
5. Ministry of Information and Broadcasting
6. State Government
7. Media persons
சிவில் விமானப் போக்குவரத்து,
பிஎஸ்என்எல்,
சென்னை மெட்ரோ ரயில்,
மாநில அரசு ஊழியர்கள்,
செய்தி ஒளிபரப்பு துறை,
வணிக கடல்துறையினர்,
ஊடகத்துறையினர்
என மேல் உள்ள 7 ஏழு வகை பணிகளில் உள்ளோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
