அரசு பேருந்துகளில் இனி 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம் முழு விவரம்
அரசு பேருந்துகளில் இனி 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம் முழு விவரம்
இதுவரை தமிழக அரசு பேருந்துகளில் பண்டிகை விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல 30 நாட்களுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையை மாற்றி தற்போது பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக இன்று மார்ச் 15 வெள்ளிக்கிழமை முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி
