புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்து கோர விபத்து 5 பேர் பலி முழு விவரம்
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்து கோர விபத்து 5 பேர் பலி முழு விவரம்
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது.இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இப்பணியில் அரியலூர் மாவட்டம் நெட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 16 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்துறை அலுவலக சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் சற்று தள்ளியிருந்ததால் தப்பித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரும் அதிர்ச்சி.. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கோர விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!By YAMUNA R Mar 31, 2024, 16:45 ISTநைனார் மண்டபம்புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலத்தில் இருந்து நைனார் மண்டபம் வழியாக வடிகால் பணி நடந்து வருகிறது. இங்குள்ள வசந்தநகர் பகுதியில் இன்று காலை ஏராளமான கூலித்தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள துணை மின் நிலைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர்கள் பாக்யராஜ், பாலமுருகன் மற்றும் மற்றொரு பாலமுருகன் என அடையாளம் காணப்பட்டனர். இங்கு வேலை பார்ப்பதற்காக திருவண்ணாமலை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற தொழிலாளர்கள் யார் என்பது குறித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துணை மின்நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்
