Breaking News

நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு -வேலூரில் மன்சூர் அலிகான் போட்டி

அட்மின் மீடியா
0

மக்களவைத் தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடப்படும் எனவும் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி கட்சி பொதுச்செயலாளர் கண்ணதாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்

   


இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், 

ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுகிறார். ஆரணியில் நிற்பதாக இருந்த நடிகர் மன்சூரலிகான் இப்போது வேலூரில் நிற்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback