Breaking News

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

நாளை தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், காலை 10:00 மணி முதல் 3:30 மணி வரை பயணிகளுக்கு உதவியாக 150 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே நாளை 03.03.2024 அன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து..

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ம்ார்ச் 3 ம் தேதி  44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் மார்ச் 3 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 44 புறநகர் ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக 25 ஆம் தேதி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே  காலை முதல் பிற்பகல் வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி  காலை 10 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.

மேலும் தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 3, 2024 அன்று மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சென்னை மெட்ரோ ரயில் ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்காமல், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்கும். எனவும் இந்த அட்டவணை மாற்றம் நாளை (03-03-2024)க்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback