பெரும் சோகம் மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் பலி முழு விவரம் College Students 4 Died
மதுராந்தகம் அருகே பேருந்துப் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி; 5க்கும் மேற்பட்டோர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூரில் தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணித்தபோது தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி பேருந்து மீது உரசியதில் படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் என்ற மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்
