மிக்ஜாம் புயல் நிவாரணம் 4 மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக்கணக்குகளில் ₹6000 வரவு முழு விவரம்
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய மிக்ஜாம் புயல் நிவாரணமாக, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தனியாக விண்ணப்பித்த நிலையில், அவர்களின் வங்கிக்கணக்குகளில் ₹6000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது.
இந்நிலையில் மழை வெள்ள நிவாரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு 6000 மழை வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது ரேசன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் ரேசன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது.
ரேர்சன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை 6000 ரூபாய் நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை.இந்நிலையில் ரேசன் கார்டு இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
