Breaking News

பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதி, ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதி? முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விவரம்



நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி,மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

அதேபோல் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது 

அப்போது ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் அமமுக விற்கு 4தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; பாஜக கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி. இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்; வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பதால் அது குறித்து பேசி சரி செய்து போட்டியிடுவோம் இவ்வாறு கூறினார்.

டிடிவி தினகரன் பேசிய போது;-

பாஜக கூட்டணியில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை, எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம், தொகுதிகள் இறுதியானதும் தெரிவிக்கிறேன். அமமுக போட்டியிடசின்னம் தொடர்பாக எந்த நிர்பந்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை. குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

அமமுக வளர்ந்து வரக்கூடிய கட்சி, நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அண்ணாமலையிடம் கொடுத்துள்ளோம் இவ்வாறு கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback