அரிசி குடோனில் பெண் மீது திடீரென சரிந்து விழுந்த அரிசி மூட்டைகள் 30 நொடியில் பத்திரமாக மீட்ட ஊழியர்கள் வைரல் சிசிடிவி வீடியோ
அரிசி குடோனில் பெண் மீது திடீரென சரிந்து விழுந்த அர்சி மூட்டைகள் பத்திரமாக மீட்ட ஊழியர்கள் வைரல் சிசிடிவி வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் குடோனில் துப்பரவு பணி செய்துகொண்டிருந்த பெண் மீது திடீரென அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு. உடனடியாக அங்கிருந்த சக ஊழியர்கள் விரைந்து வந்து மூட்டைகளை அகற்றி அவரை பத்திரமாக மீட்டனர். இப்பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில், வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (ஏபிஎம்சி) சந்தையில் வாஷியின் ஏபிஎம்சி மார்க்கெட்டில் அரிசி மூட்டைகள் உள்ள குடோனில் தரையை துடைக்கின்றார் . அப்போது திடீரென சுமார் 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் அவர் மீது விழுகின்றது
அந்த பணி பெண் அரிசி மூட்டைகளுக்கு அடியில் சிக்கிக் கொள்கிறாள். உடனடியாக அங்கு பணிபுரியும் மற்ற பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு அந்த அரிசி மூட்டைகளை அகற்றி அவளை காப்பாற்றியுள்ளார்கள் அவர்கள் அந்த அரிசி மூட்டைகளை 30 வினாடிகளில் அகற்றி அவளை விடுவித்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளார்கள்.
இந்த சம்பவம் குடோனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/satarknagnews/status/1768902604552384995
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
