3 அடி உயரம் மட்டுமே உலகிலேயே மிகவும் குள்ளமான மருத்துவர் தடைகளை தாண்டி சாதனை செய்தது எப்படி முழு விவரம்Ganesh Baraiya, The World’s Shortest Doctor
3 அடி உயரம் மட்டுமே உலகிலேயே மிகவும் குள்ளமான மருத்துவர் தடைகளை தாண்டி சாதனை செய்தது எப்படி முழு விவரம்Ganesh Baraiya, The World’s Shortest Doctor
குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சார்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி கணேஷ் பாரையா என்பவர்டாக்டராகி நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன், 2018 ஆம் ஆண்டு NEET ல் 223 மதிப்பெண்கள் எடுத்தும்,அவரது உயரம் 3 அடி , எடை 14 கிலோ என்பதால், உயரம் குறைவு மற்றும் உடல் ஊனம் காரணமாக MBBS படிப்பில் சேர அம்மாநில அரசு மறுத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மனம் தளராமல் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று படிப்பை முடித்து,பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் டாக்டர் கணேஷ் பாரையா
குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் கணேஷ் பாரையா. இவரது உயரம் 3 அடிதான் என்றாலும், மருத்துவர் ஆக வேண்டும் என 12ம் வகுப்பு முடித்த கையோடு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்த நிலையில், உயரத்தை காரணம் காட்டி, கணேஷ் பாரையாவின் விண்ணப்பத்தை இந்திய மருத்துவ கவுன்சில் நிராகரித்துள்ளது
அதன்பின்பு குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தோல்வியை தழுவிய நிலையில், அதன்பின்பு கனேஷ் பாரையா, 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதன்படி, 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த பாரையா, படிப்பை முடித்து தற்போது பயிற்சி மருத்துவராக பாவ்நகர் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்
