Breaking News

யுகேஜி படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

யுகேஜி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. காம கொடூரர்களுக்கு சப்போர்ட் செய்த பள்ளி நிர்வாகம்!

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லஞ்சேரியில் உள்ள வித்யா மந்திர் எஸ்டான்சியா தனியார் மேல்நிலைப் பள்ளி கடந்த மாதம் 23ம் தேதி ஆண்டு விழா நடந்தது அப்போது, ​​யுகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை 2 ஆசிரியர்கள் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, சிறுமிக்கு விளையாட்டு கற்பிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

 


சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், 

உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் ராசையா (29), இசை ஆசிரியர் கைலாஷ் குமார் (40) ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததுதெரியவந்ததை அடுத்துஇருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback