Breaking News

சென்னையில் அதிர்ச்சி வீட்டில் அறிவியல் ஆராய்சி செய்தபோது மர்ம பொருள் வெடித்து பிளஸ் 2 மாணவன் பலி

அட்மின் மீடியா
0

சென்னையில் அதிர்ச்சி வீட்டில் அறிவியல் ஆராய்சி செய்தபோது மர்ம பொருள் வெடித்து பிளஸ் 2 மாணவன் பலி

சென்னை கொளத்தூரில் உள்ள ஜிகேஎம் காலனியை சேர்ந்த மாணவர் ஆதித்யா பிரணவ் 12 ம் வகுப்பு படித்து வருகின்றார்

இவர் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர். எந்த நேரத்திலும் வீட்டில் அறிவியல் சோதனை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் மாணவரின் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் வந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவர் தரையில் விழுந்து சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் மாணவர் ஆதித்யா பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரனையில் பாஸ்பரஸ் வைத்து ஆய்வு நடத்திய போது வெடித்ததன் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback