Breaking News

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

அட்மின் மீடியா
0

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்தானது


நடைபெற உள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

திமுக கூட்டணி:-

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுக கூட்டணி:-

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் 

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பாமக :-

பாமக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

இந்திய ஜனநாயக கட்சி

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி

அதேபோல் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

அதன்படி ஜான் பாண்டியன் அவர்களின் தமிழகம் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு  ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback