Breaking News

முதியோர் இல்லம் நடத்துகின்றோம் உதவுங்கள் என - கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய 2 பேர் கைது!

அட்மின் மீடியா
0

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாக கூறி 

பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்படுள்ளனர். அவர்கள் ஆசிரமம் என்ற பெயரில் கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(41). இவரது செல்போனில் தொடர்பு கொணட அடையாளம் தெரியாத ஒரு பெண் முதியோர்கள், அனாதைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருகின்றோம் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுள்ளார்

அதன்பின்பு அனாதை ஆசிரமம் மற்றும் அங்குள்ள ஆதரவற்றோர் குறித்த புகைப்படங்களை அவரது வாட்ஸப்பில் அனுப்பி வங்கி கணக்கையும் அனுப்பி பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனை நம்பி முத்து தாங்கள் நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ள கூறினார். 

சந்தேகமடைந்த முத்து அவர்கள் கூறிய விலாசத்தில் உள்ள ஆசிரமத்தை நேரில் பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த இடத்தில் ஆசிரமத்தின் பெயரில் கால் சென்டர் இயங்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும் அந்த கால் சென்டரில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்துள்ளார்கள்

அவர்கள் அனைவரும் செல்போனில் பலரை தொடர்பு கொண்டு ஆசிரம் நடத்துகின்றோம் என கூறி பணம் சுருட்டி வருகின்றார்கள் என தெரிந்து  செம்பியம் காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார்.

அதனடிப்படையில் தனிப்படை போலீசார், கொளத்தூரில் இயங்கி வந்த  கால் சென்டரில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். விசாரணையில், 2 அறக்கட்டளைகள் பெயரில், சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கோபி சாரதி என்ற நபர் கால் சென்டர் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்றது தெரிய வந்த‌து.

வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளி கோபி என்பவரை கொடைக்கானலிலும், மற்றொரு குற்றவாளியான கண்ணன் என்பவரை எண்ணூரில் வைத்தும் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் பெயரில் பொதுமக்களிடம் இருந்து பல கோடி‌ ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.பின்னர் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback