Breaking News

நீலகிரியில் கட்டிட பணியின் போது மண் சரிந்து மண்ணில் புதைந்த 2 வடமாநில தொழிலாளர் பரிதாப பலி!

அட்மின் மீடியா
0

உதகை அருகே மரம் வளர்ப்பு பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் சொத்தில் 30 அடி உயர தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. 

இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (22), ஜாகீர் (25) ஆகியோர் எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டதால் மண்ணில் புதையுண்டனர்.



இதையறிந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணில் புதையுண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மண்ணில் புதையுண்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ரிஸ்வான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமானப் பணியின்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் சிக்கிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு.ரிஸ்வான் (வயது 22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு.சகிர் (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback