தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் - தேர்தல் ஆணையம் பட்டியல் இணைப்பு 27 persons disqualified to contest in election in tamilnadu
தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. வேட்பாளர்கள் தகுதி நீக்கம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது
தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
பொதுவாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ட்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது
இந்நிலையில் கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தல் செலவு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வில்லை அதில் தேர்தல் செலவு கணக்கை காட்டாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை அனுப்பி உள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

