பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா... மார்ச் 26 உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
