நாடாளுமன்ற தேர்தல் 2024 திமுக தேர்தல் அறிக்கை முழு விவரம் DMK Manifesto 2024 PDF DOWNLOAD
நாடாளுமன்ற தேர்தல் 2024 திமுக தேர்தல் அறிக்கை PDF முழு விவரம்
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
மேலும் தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
தமிழகம் (39) மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திமுக தலைமையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை:-
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் பல கூட்டங்கள் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கருத்துகளை நேரில் கேட்டறிந்தனர்
மேலும் சமூக ஊடங்களில் DMKManifesto2024 என்ற தலைப்பில் பரிந்துரைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பின்பு இந்தக் குழுவினர் தயாரித்த தேர்தல் அறிக்கை இன்று (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்:-
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
- ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
- பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
- மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
- மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
- தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்
- அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழருக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
- ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்
- நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
- இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.
- கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.
- தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- 16. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
- பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
- வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
- மத்திய அரசு அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
- வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.
- இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
- விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
- LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை -ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.
- பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
- மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும்.
- பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
- ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
- மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.
- கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.
- மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
- ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
- கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.
- இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
- சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்
PDF DOWNLOAD CLICK HERE
https://drive.google.com/file/d/1Iuq_goP8eSfPBDqAOad_7MfLCL_FPK1v/view?usp=sharing
காங்கிரஸ் :
காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் தனி தொகுதி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.
மதிமுக :
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது திருச்சி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ மகன் துரை வைகோ போட்டியிட உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) :
திமுக கூட்டணி தலைமையில் , CPM கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் , மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சி போட்டியிட உள்ளது என கடந்த மார்ச் 12ஆம் தேதி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அதில், சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :
திமுக கூட்டணி தலைமையில் , CPI கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் , நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதியில் அக்கட்சி போட்டியிட உள்ளது. நாகையில் வை.செல்வராஜ் மற்றும் திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி :
திருமாவளவன் தலைமையிலான விசிக கட்சி விழுப்புரம் தொகுத்யில் ரவிக்குமார் அவர்களும் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் அவர்கலூம் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளார்கள்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் :
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக எம்பியாக இருக்கும் நவாஸ் கே.கனி மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மக்கள் தேசிய கட்சி :
திமுக கூட்டணியில் கொ.ம.தே.கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அக்கட்சி சார்பாக சூர்ய மூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
மக்கள் நீதி மய்யம் :
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக மநீம கட்சி பிரச்சாரம் செய்வது என்றும் 2025 மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்


