Breaking News

2020ல் நடந்த விபத்தில் 2 கைகளையும் இழந்தவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகள் மருத்துவர்கள் சாதனை

அட்மின் மீடியா
0

ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த நபருக்கு மூளைச் சாவு அடைந்த பெண்ணின் கரங்களை பொருத்தி டெல்லி கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

இந்த அறுவை சிகிச்சையை 11 மருத்துவர்கள் சேர்ந்து 12 மணி நேரத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளனர். 



டெல்லியை சேர்ந்த 45 வயதான நபர் கடந்த 2020ம் ஆண்டில் ரயில் விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். 

இந்நிலையில் தெற்கு டெல்லியில் மீனா மேத்தா என்பவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தார் இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது கைகளை எடுத்து  அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சவாலான இந்த  அறுவை சிகிச்சை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக்கியுள்ளனர்.

தனக்கு கைகள் கிடைத்த பின், பெயிண்டர் இரு கைகளின் கட்டைவிரலை உயர்த்தி காண்பிப்பதுடன், அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவினர் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி பொங்க செய்தி வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback