Breaking News

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

அட்மின் மீடியா
0

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இந்த சட்டம் பாரபட்சமானதாகவோ அல்லது அரசியலமைப்பை மீறுவதாகவோ இல்லை என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

இது ராஜஸ்தான் அரசின் கொள்கை முடிவு; இதில், நீதிமன்றம் தலையிடாது என தெரிவிப்பு


ராஜஸ்தான் மாநில சட்டசபையில் கடந்த 1989ம் ஆண்டு 'இரண்டு குழந்தைகள் கொள்கை' என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசுப்பணி பெறுவதற்கான தகுதியற்றவர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

2017 இல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீர ராம்ஜி லால் ஜாட் என்பவர், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க அவருக்கு தகுதி இல்லை என்று அவருக்க் வேலை இல்லை என அவரது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது ராஜஸ்தான் அரசு

உயர் நீதிமன்றத்தை அணுகிய அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், ''ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த 'இரண்டு குழந்தைகள் கொள்கை' தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback