Breaking News

17 ம் தேதி வரை அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் & ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 GCTP - CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் & ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம்

கீழ்கண்ட CMRL நிலையங்களின் கட்டுமான பணிக்காக 1. அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில்நிலையம் 2. நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3. ஸ்டெர்லிங்சாலை மெட்ரோரயில்நிலையம் ஆகிய இடங்களில் 11.03.2024 முதல் 17.03.2024 வரை ஒரு வார காலத்திற்க்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ்ரோடு ஹாடோஸ்ரோடு உத்தமர்காந்திசாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பிவிடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.


இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர்காந்திசாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை (KH Road) வழியாக வள்ளுவர்கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அமைந்தக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (LeftTurn) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

. வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர்கோட்டம் சந்திப்பில் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை ஸ்டெர்லிங்சாலை உத்தமர்காந்திசாலை (NH Road) வழியாகத் திருப்பிவிடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம். ← ←

. மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து மாற்றப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback