திருப்பூர் அருகே கொடூரம் கோவில் திருவிழாக்கு சென்ற 17 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 7 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்
கோவில் திருவிழாக்கு சென்ற 17 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 7 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கடந்த 9-ஆம் தேதி இரவு வீரக்குமாரசாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதே பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அவரின் தாயும் வந்துள்ளனர். இரவு நிகழ்ச்சி முடிய தாமதமானதால், சிறுமியை அவரின் தோழியுடன் விட்டுவிட்டு தாய் மட்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்று, இரவு நீண்ட நேரம் கழித்து தனது மகளைத் தேடியுள்ளார். எங்கு தேடியும் மகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் 11ம் தேதி காலை மாணவி வீட்டுக்கு வந்த அவர் தனது தாயிடம் கலை நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
திரும்பி இருசக்கர வாகனத்தில் வந்தபோது வழியில் மூலனூர் அருகே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மிரட்டி தன்னை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளக்கோவில், காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32), செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மூலனூர், தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (27), வெள்ளக்கோவில், பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28), வெள்ளக்கோவில், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளக்கோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம் பாளையத்தைச் சேர்ந்த பலசுப்பிரமணி (30) என 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
