மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எந்த மாவட்டம் தெரியுமா
மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எந்த மாவட்டம் தெரியுமா
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் திருத்தேர் விழா மார்ச் 14ம் தேதி நடைப்பெறுவதையடுத்து, அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேல்மலையனூர் அம்மன்மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதற்கு அடுத்த நாள் மார்ச் 9ம் தேதி மயான கொள்ளை விழா நடைப்பெறுகிறது. மார்ச் 12ம் தேதி தீமிதி விழாவும், மார்ச் 14 திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது .மேல்மலையனூர் அங்காளம்மன்மார்ச் 14ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் மேல்மலையனூர் அம்மனை தரிசிக்க வருவதார்கள் என்பதாலும், உள்ளூர் மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாகவும் மார்ச் 14ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு மார்ச்23ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
