அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் ₹1000 நிதி உதவி அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் ₹1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
முன்னதாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது; மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித்தொகை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிப்பு
மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி நிதி என்ற பெயரில் அனைத்து பெண்களும் உயர்கல்வி பெறுவதற்காக திமுக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.முன்னதாக அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே புதுமை பெண் திட்டமான மாணவிகளின் கல்லூரி படிப்பை தொடர்வதற்க மாதம் 1000 வழங்கும் திட்டம் அமலில் இருக்கும் நிலையில் தற்பொழுது விரிவுப்படுத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் 1000 வழங்கும் நீட்டிப்பை அமல்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்
