Breaking News

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் காங்கிரஸ் கட்சி

அட்மின் மீடியா
0

தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி!

தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகள்:-

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்

தொழிலாளர்களின் சுகாதார உரிமையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்

முக்கிய அரசுப் பணிகளில் தொழிலாளர் விரோத ஒப்பந்த முறை முடிவுக்குக்குக் கொண்டுவரப்படும்

நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களின் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்

ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட விரிவான சமூக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்

விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள்:-

விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் 

பொருள்களுக்கு GST-யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும் 

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும் 

பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் 

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்

பெண்களுக்காக 5  வாக்குறுதிகள்:-

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் 

வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும் 

மத்திய  அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் 

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் 

அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

இளைஞர்களுக்கான 5  வாக்குறுதிகள்:-

30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் 

25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி, 100 நாள் வேலைத்திட்டம் போல் இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டமாக்குவோம்

வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

சிறு தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட் அப் நிதி உருவாக்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்



Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback