Breaking News

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சிறுபான்மை மொழியினருக்கு தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிமுக்கிய அறிவிப்பு.. தமிழ் தேர்வு எழுத வேண்டாம்.. யார் - யார் தெரியுமா?




தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தமிழ் அல்லாமல் தெலுங்கு, மலையாளம்,உருது,கன்னடம் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்களும் தமிழ் தேர்வை எழுத வேண்டிய நிலை உள்ளது. 

இவ்வாறு எழுதும் மாணவர்கள், அதில் குறைவான மதிப்பெண்களை வாங்குகின்றனர். இதனால் அவர்களின் மொத்த மதிப்பெண் குறைகிறது.

இதனிடையே, தமிழை தாய்மொழியாக கொண்டிராத பள்ளி மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழை கட்டாய மொழி பாடமாக்குவதில் இருந்து ஒரு வருடம் விலக்கு அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில்  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையில்

தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

வரும் 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்தே விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விலக்கு நடப்பு ஆண்டு தேர்வுக்கு மட்டும் பொருந்தும். தமிழ் தேர்வுக்கு பதிலாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதி கொள்ளலாம்.என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback