Breaking News

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு NIA அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்- தேசிய புலனாய்வு முகமை(NIA) அறிவிப்பு


கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று (01.03.2024) திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.  வெடி விபத்தில் குறைந்தது 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூன்று ஊழியர்களும் ஒரு வாடிக்கையாளர்களும் அடங்குவர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர், சிலிண்டர் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில்  

ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு தான் வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்- தேசிய புலனாய்வு முகமை(NIA) அறிவித்துள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/AskAnshul/status/1763546645827055910

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/AdityaRajKaul/status/1763548730861773058/video/2

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback