Breaking News

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கிடு முழு விவரம் lok sabha election 2024 Congress

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  10 தொகுதிகள் ஒதுக்கிடு முழு விவரம்

 




தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10  தொகுதிகள் ஒதுக்கிடு செய்யப்பட்டு அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்களும் இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்சிகள்

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மதிமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback