Breaking News

புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


புதுச்சேரியில் 2024 - 25 கல்வி ஆண்டு முதல், 1 முதல் 12ம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும்பள்ளிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31, 2025 வரை நடைபெறும்.

மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ம் தேதி வரையிலும் மற்றும் மே 1 முதல் 31ம் தேதி வரையிலும் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள் தொடர்ந்தது நடைபெறும் என தெரிவித்துள்ளார்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback