மே 1-ம் தேதி முதல் ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! முழு விவரம்
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரயில்வே யூனியன் அறிவித்துள்ளது
மே 1-ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுதவில்லை என்றால் வேலை நிறுத்தம் எனவும்,மார்ச் 19ம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பாக ரயில்வே அமைச்சருக்கு நோட்டிஸ் அனுப்ப முடிவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் மே 1 முதல் நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்தப்போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துவதற்காக JFROPS என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் ரயில்வே யூனியன்கள் கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கன்வீனர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில்
மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மே 1ம் தேதி அரசு ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய உள்ளோம். இதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ் அந்தந்த துறை நிர்வாகங்களுக்கு மார்19ம் தேதி வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளரான மிஸ்ரா கூறுகையில், ‘ நாடு தழுவிய வேலைநிறுத்தம் குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்புவோம் என்று பல்வேறு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். அனைத்து ரயில் சேவைகளும் மே 1 முதல் நிச்சயம் நிறுத்தப்படும்’ என்றார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
