Breaking News

ஆட்சிக்கு வந்ததும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன்பயிற்சி - ராகுல் காந்தி வாக்குறுதி Rs 1 lakh per year for every graduate and diploma holder.

அட்மின் மீடியா
0

ஆட்சிக்கு வந்ததும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன்பயிற்சி - ராகுல் காந்தி வாக்குறுதி Rs 1 lakh per year for every graduate and diploma holder.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் 

25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி, 100 நாள் வேலைத்திட்டம் போல் இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டமாக்குவோம்

வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு பயிற்சி" இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும்

சிறு தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட் அப் நிதி உருவாக்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback