Breaking News

நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிற்க்கு 1 தொகுதி ஒதுக்கீடு முழு விவரம் lok sabha election mdmk

அட்மின் மீடியா
0

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு!


திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஓதுக்கப்பட்டுள்ளது அந்தத் தொகுதி எது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (8.3.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமு கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1(ஒரு) தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்

இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback