கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் - உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் வைரல் வீடியோ இதோ world Smallest washing machine
கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் - உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் வைரல் வீடியோ இதோ world Smallest washing machine
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் (Andhra Pradesh) சேர்ந்த சாய் திருமலநீதி (Sai Tirumalaneedi) என்பவர் உலகின் ஆகச் சிறிய துணி துவைக்கும் இயந்திரத்தை உருவாக்கி கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதுகுறித்து கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதன் Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்
இந்த வாஷிங் மெஷின் நீளம் 1.45 இன்ச் , அகலம் 1.61 இன்ச் மற்றும் உயரம் 1.69 இன்ச் ஆகும். அதவாது இயந்திரத்தின் நீளம் 37 மில்லிமீட்டர்; அகலம் 41 மில்லிமீட்டர்; உயரம் 43 மில்லிமீட்டர். ஆகும் சாய் திருமலாநீதி சிறிய சிறிய பொருட்களை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷினைத் தயாரித்துள்ளார். சாய் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிறு துணி ஒன்றைத் துவைக்கப் போடுவதைக் காணமுடிகிறது.
தற்போது இந்த வாஷிங் மெஷின் கின்னஸ் சாதனை படைப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/p/C3lWiWTqSaW/
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
