Breaking News

வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை சென்னையில் அடக்கம் செய்யப்படும் சைதை துரைசாமி அறிவிப்பு vetri duraisamy passed away

அட்மின் மீடியா
0

வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை சென்னையில் அடக்கம் செய்யப்படும் சைதை துரைசாமி அறிவிப்பு

.இன்று மாலை 5 மணிக்கு, வெற்றி துரைசாமியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

சென்னை பெருநகர மாநராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் 2024 பிப்ரவரி 04 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரது பூத உடல் நாளை 13/02/2024 செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு அவரது உடல் கீழ்கண்ட இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி. நகர்) மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.

முகவரி:

எண்:28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், நந்தனம் சென்னை - 35. (நந்தி சிலை அருகில்) : 8428431107, 9840043335

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு வீடியோ 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/02/rip-vetri-duraisamy.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback