இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம் upi payment sri lanka
இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்
இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் வசதிக்காக யு.பி.ஐ மற்றும் ரூபே (Rupay) கார்டு சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன
வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமமின்றி பணப்பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.அந்த வகையில் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணையவுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்து நிலையில், பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. அந்த பட்டியிலில் தற்போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளும் இணைந்துள்ளன.
கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபையில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும்
இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் நாடுகளுக்கு பயணிக்கு இந்தியர்கள் இனிமேல் யுபிஐ சேவை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்
