Breaking News

அமீரகத்தில் யுபிஐ சேவையை அறிமுகபடுத்திய மோடி மற்றும் அதிபர் அல் நஹ்யான்! முழு விவரம் uae upi payment

அட்மின் மீடியா
0

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார் அங்கு பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இதனைதொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி அபுதாபியில் உள்ள ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே உரையாற்றுகிறார்.இன்றைய நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாளை துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.


இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.மேலும் யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தினர்.

யுபிஐ என்றால் என்ன:-

Unified Payments Interface (UPI) யுபிஐ என்பது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்  இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும். 

இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறையில் இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.இதில், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback