Breaking News

தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள், அறிவித்த திட்டங்கள் முழு விவரம் TN Budget 2024

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12.02.2023 அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது,இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் 2024- 2025 ம் ஆண்டுக்கான  பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என  எதிர்ப்பார்க்கபப்ட்டு வருகின்றது முன்னதாக தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டது அந்த முத்திரை சின்னத்தில் தடை தாண்டி … வளர்ச்சி நோக்கி என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது 

இன்று தமிழக சட்டசபையில் 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.

இதை தொடர்ந்து 20-ம் தேதி(நாளை) வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

பட்ஜெட் சிறப்பம்சங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு!

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு

நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.

நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம்.

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை  பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் LIVE  

பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ZyAMl6ljeKE




Give Us Your Feedback